நாயிடம் மன்னிப்பு கேட்காத வாகன ஓட்டி கொலை

வாகனத்தை நிறுத்தும் போது லேசாக நாயை உரசியதற்கு நாயிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று உரிமையாளர் கேட்க வலியுறுத்த, மறுத்த வாகன ஓட்டி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் டில்லியில் அரங்கேறியுள்ளது.

டில்லியில் உத்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜேந்தர் ராஜா. இவர் நள்ளிரவு பணியை முடித்து மினி டிரக் வாகனத்தை தனது வீட்டருகே உள்ள இடத்தில் நிறுத்தினார். அப்போது அங்கு படுத்திருந்த ஒரு நாய் மீது வாகனம் லேசாக உரசியது.

இதனால் அந்த நாய் பயந்து குறைத்தது. இதையடுத்து வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த நாயின் உரிமையாளர் அன்கித் எழுந்துவந்தார். அவரிடம் வாகனஓட்டி விஜேந்திர ரானா நடந்ததைக் கூறி வருத்தம் தெரிவித்தார்.

ஆனால் நாயின் உரிமையாளர் அன்கித், தன்னிடம் வருத்தம் தெரிவித்தால் போதாது என்றும் தனது நாயிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார். இதற்கு விஜேந்திர ரானா மறுத்தார்.

இதையடுது அன்கித் மற்றும் அவரது உறவினர் பரஸ் ஆகியோர் கத்தி மற்றும் ஸ்குரூ டிரைவரால் சரமாரியாக விஜேந்திரரை தாக்கினார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு வெளியே வந்த விஜேந்திரரின் சகோதரையும் தாக்கினர்.

பிறகு அக்கம்பக்கத்தினர் காயமடைந்த இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனஆல் சிகிச்சை பலனின்றி விஜேந்திரர் மரணமடைந்தார். அவரது சகோதரர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொட காவலர்கள், அன்கித் மற்றும் பரஸ் ஆகோரை கது செய்துள்ளனர்.

Sharing is caring!