நாளை கேரளா வருகிறார் காங்., தலைவர் ராகுல் காந்தி

புதுடில்லி:
கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை காங். தலைவர் ராகுல் நாளை பார்வையிடுகிறார்.

கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை, காங்., தலைவர் ராகுல் நாளை 28ம் தேதி பார்வையிட உள்ளார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கியது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் இதுவரை 372 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் வரும் 28ம் தேதி பார்வையிட உள்ளார்.

வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள செங்கண்ணூர், ஆலப்புழா, அங்கமாலி பகுதிகளை நாளை பார்வையிடுகிறார். மேலும் 29ம் தேதி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டத்தை பார்வையிட உள்ளதாக காங்., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!