நாளை நடக்கிறது இருதயவியல் சிறப்பு முகாம்

காரைக்கால்:
இருதயவியல் சிறப்பு முகாம் நடக்கிறது… நடக்கிறது என்று அறிவிச்சு இருக்காங்க.

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில், நாளை (4ம் தேதி) புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிபுணர்களின் இருதயவியல் மற்றும் நரம்பியல் சிறப்பு முகாம் நடக்கிறது.

இதுகுறித்து, காரைக்கால் கலெக்டர் கேசவன் தெரிவித்துள்ளதாவது:
காரைக்கால் அரசு பொது மருத்துவமனை உள்வளாகத்தில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் மாதமிருமுறை நடைபெறும். முகாமாக, நாளை (4ம் தேதி) இருதயவியல் மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனர்.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!