நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம்… மத்திய அரசு அனுமதி

புதுடில்லி:
நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர், சுமுகமாக நடப்பதை உறுதி செய்யும் வகையில் நாளை மறுநாள், அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர், 11ல் துவங்கி, ஜன., 8ம் தேதி வரை நடக்கிறது. ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளின் தாக்கம், கூட்டத் தொடரில் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முத்தலாக் மசோதா இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் நிறுவனங்கள் அவசர சட்டதிருத்த மசோதாக்களை, இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற, அரசு திட்டமிட்டு உள்ளது.

இரு சபைகளையும், அமளி இன்றி, சுமுகமாக நடத்த, நாளை மறுநாள் அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு, மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!