நாளை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும்… வானிலை மையம் தகவல்

சென்னை:
நாளை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில், நாளை 4ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பொழிவு இல்லை. தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இது மேற்கு நோக்கி நகரும் பட்சத்தில் நாளை 4, 5, 6ம் தேதிகளில் மழை பெய்ய துவங்கும். நாளை 4ம் தேதி கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!