நாளை முதல் 412 நீட் தேர்வு மையங்களில் பயிற்சி… அமைச்சர் தகவல்

சென்னை:
நாளை முதல் தமிழகம் முழுவதும் 412 நீட் தேர்வு மையங்களில் பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

நாளை முதல் தமிழகம் முழுவதும் 412 நீட் தேர்வு மையங்களில் பயிற்சி அளிக்கப்படும். அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் இருந்து குறைந்தபட்சம் 1000 மருத்துவ மாணவர்களை உருவாக்கும் நோக்குடன் பயிற்சி அளிக்கப்படும்.

அரசு பள்ளி ஆசிரியர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!