நிதி கேட்கதான் டில்லி வந்தோம்… அமைச்சர் தகவல்

புதுடில்லி:
நிதி கேட்கதான் டில்லி வந்தோம் என்று தமிழக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி டில்லி சென்று, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினர். பின்னர் இருவரும் நிருபர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் வேலுமணி கூறியதாவது:

கஜா புயல் பாதிப்பு நிவாரண நிதி, உள்ளாட்சி அமைப்புக்கான நிதி ஆகியவற்றை பெறவே டில்லி வந்தோம். தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால், நிர்மலா சீதாராமனை சந்தித்தோம். கூட்டணி குறித்து முதல்வர், துணை முதல்வர் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!