நியமிக்கலாம்… நியமிக்கலாம்… கொலீஜியம் பரிந்துரை ஏற்பு

புதுடில்லி:
அப்பாடா… இந்த முறை ஏற்றுக்கிட்டாங்க… ஏற்றுக்கிட்டாங்க. யாரை? எதற்கு என்று தெரியுங்களா?

உத்தரகாண்ட் ஐகோர்ட் நீதிபதி ஜோசப்பை, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதியான கேரளாவை சேர்ந்த ஜோசப்பை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது.

ஆனால், இதனை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது. தொடர்ந்து சென்னை ஐகோர்ட் நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒடிசா ஐகோர்ட் தலைமை நீதிபதி வினீத் சரண் ஆகியோருடன், ஜோசப் பெயரையும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்குமாறு மீண்டும் பரிந்துரை செய்தது.

இதனை ஏற்று கொண்ட மத்திய அரசு, இந்திரா பானர்ஜி, வினீத் சரண், கே எம் ஜோசப் ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிப்பதற்கான பணிகளை துவக்கியுள்ளதாக டில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!