நியூ கெலடோனியா 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள நியூ கெலடோனியா (New Caledonia) பகுதிக்கு அருகில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, 1,000 கிலோமீற்றருக்கு உட்பட்ட கரையோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சுனாமி அலைகள் சில அவதானிக்கப்பட்டதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் கெலடோனியாவின் தீவுகளில் ஒன்றான தடின் (Tadine) பகுதியின் தென் கிழக்குப் பிராந்தியத்திலிருந்து 168 கி.மீ. தொலைவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் நிலைகொண்டுள்ளது.

கிட்டத்தட்ட 270,000 பேர் வசிக்கும் நியூ கலெடோனியா, பிரெஞ்ச் நிலப்பகுதியாகும்.

இந்தநிலையில், தமது நாட்டின் கரையோரப் பகுதிகளில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என நியூஸிலாந்தின் சிவில் பாதுகாப்பு மற்றும் அவசர முகாமைத்துவ அமைச்சு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

Sharing is caring!