“நிர்வாக பணிகளுக்கு கலெக்டர் அனுமதிக்கவில்லை”

சென்னை:
நிர்வாக பணிகளுக்கு தூத்துக்குடி கலெக்டர் அனுமதி தரவில்லை என்று வேதாந்தா குரூப் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை மூட பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த விசாரணையின்போது, நிர்வாக பணிகளை மேற்கொள்ள தீர்ப்பாயம் அனுமதி அளித்தது.

ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி எஸ்ஜே வசீப்தர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 6 வாரத்திற்குள் அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று (30ம் தேதி) விசாரணைக்கு வந்தது.

அப்போது குழுவில் இருந்து விலகுவதாக வசீப்தர் கடிதம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் வேதாந்தா நிறுவனம் சார்பில், வாதாடுகையில், நிர்வாக பணிகளுக்கு தூத்துக்குடி கலெக்டர் அனுமதி தரவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய நீதிபதி மோஹித்ஷாவை நியமனம் செய்யலாம். ஆலை மூடப்பட்ட போதும், 2,600 பேர் வேலையை விட்டு நீக்காததால் நாளொன்றுக்கு ரூ.5 கோடி இழப்பு ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!