நிறுத்தம்… மின் உற்பத்தி நிறுத்தம்… தூத்துக்குடியில்

சென்னை:
நிறுத்தம்… நிறுத்தம்… மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில், 630 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. துாத்துக்குடி மாவட்டம், வ.உ.சி., துறைமுகம் அருகில், மின் வாரியத்திற்கு, துாத்துக்குடி அனல் மின் நிலையம் உள்ளது.

இங்கு தலா 210 மெகா வாட் திறனில் ஐந்து அலகுகளில், மின் உற்பத்தி செய்யப்படுகிறது. சில தினங்களாக தென் மாவட்டங்களில் பெய்து வரும் மழை மற்றும் தீபாவளி தொடர் விடுமுறையால், மின் தேவை குறைந்துள்ளது.

இதையடுத்து நிலக்கரியை மிச்சப்படுத்த, துாத்துக்குடி மின் நிலையத்தின் மூன்று அலகுகளில், தற்போது, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தகவல்கள் வெளியாகி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!