நிறுத்தம்… மின் உற்பத்தி நிறுத்தம்… மேட்டூர் அனல் மின்நிலையத்தில்

சென்னை:
நிறுத்தம்… நிறுத்தம்… மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில், 600 மெகா வாட் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூரில், மின் வாரியத்திற்கு, தலா, 210 மெகா வாட் திறனில், நான்கு அலகுகளும், 600 மெகா வாட் திறனில், ஒரு அலகும் உடைய, அனல் மின் நிலையம் உள்ளது.

இது சேலம், ஈரோடு உட்பட மாவட்டங்களின் மின் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், மேட்டூர் மின் நிலையத்தின் 600 மெகா வாட் அலகில் நேற்று முன் தினம் இரவு, 11 மணிக்கு, ‘பாய்லர் டியூப் பஞ்சர்’ காரணமாக, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!