நிலக்கண்ணி வெடியில் சிக்கி 6 ஜவான்கள் வீரமரணம்… மக்கள் அதிர்ச்சி

ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கண்ணி வெடியில் சிக்கி 6 ஜவான்கள் வீரமரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ஜாகுவார் படை வீரர்கள் 6 பேர் நிலக்கண்ணிவெடியில் சிக்கி வீரமரணம் அடைந்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டம் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இப்பகுதியில் மாவோயிஸ்டுகளை வேட்டை மாநில அரசால் ஜாக்குவார் என்ற சிறப்பு போலீஸ் படை உருவாக்கப்பட்டுள்ளது.

நேற்று கர்வா மாவட்டத்தின் சின்ஜோ என்ற பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு ஜாக்குவார் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது மாவோயிஸ்டுகள் வைத்திருந்த நிலக்கண்ணி வெடி வெடித்ததில், 6 ஜவான்கள் வீரமரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. பலர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!