நிலநடுக்கத்தின் காரணமாக, 700க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்
ஈரானின் மேற்குப் பகுதியில் நேற்று இரவு, 6.3 ரிக்டர் அளவில் எற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக, 700க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி தகவல் வௌியிட்டுள்ளது.
கடந்த வருடம் 600க்கும் அதிகமான உயிர்கள் காவுகொள்ளப்பட்ட மாகாணமான, கேர்மன்ஷாஹ் மாகாணத்திலேயே இந்த நிலநடுக்கமும் மையம் கொண்டுள்ளது.
இந்தநிலையில், ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 729 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 700 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு சென்றுள்ளதாகவும் சுமார் 18 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாகாண ஆளுநர் ஹஷாங் பஸ்வான்ட் (Houshang Bazvand) தெரிவித்துள்ளார்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S