நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 91 ஆக உயர்வு

ஜகர்த்தா:
நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேஷியாவின் லோம்போக் மற்றும் பாலி தீவுகளில் நேற்று இரவு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகி உள்ளது. இதில் சிக்கி நேற்று 80 பேர் பலியாகினர். இந்நிலையில் இன்று மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

பலியானவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது. இந்த நில நடுக்கத்தில் சிக்கி 209 பேர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மிக அதிகபட்சமாக வடக்கு லோம்போக் பகுதியில் 72 பேர் பலியாகி உள்ளனர்.

3,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். சேதம் அதிகளவில் உள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!