நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்ல ரயில்களில் கட்டண விலக்கு

புதுடில்லி:
விலக்கு… விலக்கு… நிவாரணப் பொருட்களை ரயிலில் கொண்டு செல்வதற்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கஜாபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் ரயிலில் கொண்டு செல்வதற்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படும் நிவாரண பொருட்களுக்கு டிச.,10-ம் தேதி வரையில் சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ரயில் மூலம் கொண்டு வரப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.

முன்னதாக நிவாரண பொருட்கள் சரக்கு ரயிலில் கொண்டு செல்ல கட்டண விலக்கு கோரி தமிழக முதல்வர் பழனிசாமி மத்திய ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!