நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் விபரங்கள் விலை வந்ததால் பரபரப்பு

புதுடில்லி:
விற்பனைக்கு வந்த மாணவர்களின் விபரத்தால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

‘நீட்’ எனப்படும், மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதிய, ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த, 2.4 லட்சம் பேரின் செல்போன் எண், புகைப்படங்கள் போன்றவை இணையதளத்தில் விற்பனைக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

‘நீட்’ தேர்வுகளை, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்துகிறது. இந்தாண்டு நீட் தேர்வு எழுதிய மஹாராஷ்டிரா, ஆந்திரா உட்பட சில மாநிலங்களை சேர்ந்த, 2.4 லட்சம் பேரின் தகவல்கள் விற்பனைக்கு உள்ளதாக இணையதளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதியவர்களின் முழு முகவரி, செல்போன் எண், புகைப்படம், பிறந்த நாள், இ – மெயில் முகவரி, நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் போன்ற தகவல்களை அளிப்பதாக அந்த இணையதளம் கூறியுள்ளது. இதற்கு, இரண்டு லட்சம் ரூபாய், பணம் செலுத்த வேண்டும் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நீட்’ தேர்வு எழுதியோரின் தகவல்கள் விற்பனைக்கு வந்துள்ளது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!