நீட் தேர்வு… மாணவர்கள் யாரும் விடுபடாமல் இருக்க கவனம் தேவை

சென்னை:
நீட் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் யாரும் விடுபடாமல் இருக்க சிறப்பு கவனம் செலுத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை முதன்மை இயக்குநர் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:

புயல் பாதித்த மாவட்டங்களில் நீட் தேர்வுக்காக அரசு வழங்கும் இலவச பயிற்சியில் மாணவர்களை சேர்க்க தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் யாரும் விடுபடாதபடி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புயல் பாதித்த மாவட்டங்களில் நீட் தேர்வுக்கு மாணவர்கள், விண்ணப்பிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான வசதிகளை செய்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!