நீதிபதி பெயரில் போலி இ-மெயில்… மர்ம நபருக்கு வலை வீச்சு

புதுடில்லி:
நீதிபதி பெயரில் போலி இ-மெயில் தொடங்கி பலருக்கும் மெயில் அனுப்பிய மர்ம நபரை போலீசார்  தேடி வருகின்றனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதி, மதன் பி.லோகுர் பெயரில், போலி இ – மெயில் முகவரி தொடங்கி பலருக்கு மெயில் அனுப்பிய மர்ம நபரை , போலீசார் தேடி வருகின்றனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வருபவர் மதன் பீம் லோகூர். இவரது இ – மெயில் முகவரியை போலவே, போலியான முகவரி உருவாக்கி அதன் மூலம் பலருக்கு மெயில் அனுப்பப்பட்டு வருவது, சமீபத்தில் தெரிய வந்தது.

ஒரு மர்ம நபர் நீதிபதியின் பெயரில் இந்த போலி மெயில் தகவல் பரிமாற்றத்தை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற கணினி பிரிவு, இணைபதிவாளர், அவதேஷ் குமார் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பெயரில், போலி, ‘டுவிட்டர்’ கணக்கு தொடங்கி, அதில் தரக்குறைவான தகவல்களை பரப்பி வந்தது, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போலி கணக்கு தொடங்கியவரை, போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் நீதிபதி மதன் பி.லோகூர் பெயரில் போலி இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!