நீதிமன்றத்திற்கு மீண்டுமொரு முறை நன்றி… கமல் டுவிட்
சென்னை:
“நீதிமன்றத்திற்கு மீண்டுமொருமுறை நன்றி என்று கமல் டுவிட் போட்டுள்ளார். எதற்காக தெரியுங்களா?
நடிகர் விஷால் தலைமையில் இயங்கிவரும் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பெரிய முறைகேடு நடந்திருப்பதாக கூறி சங்க கட்டிடத்திற்கு பூட்டு போடப்பட்டது.
நடிகர் விஷாலும் கைது செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டார். அவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றத்தில் விஷால் இது பற்றி வழக்குப்பதிவு செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் சங்க கட்டிடத்திற்கு சீல் வைத்தது தவறு என தீர்ப்பளித்து அதை நீக்க உத்தரவிட்டது.
இதற்கு நடிகர் கமல் பாராட்டி டூவிட்டரில் பதிவிட்டுள்ளார். “நீதிமன்றத்திற்கு மீண்டுமொருமுறை நன்றி. தோழர். நடிகர்@VishalKOfficial அவர்களுக்கு நீதி கிடைத்ததற்காக…” என அவர் கூறியுள்ளார்.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S