நீரவ் மோடியை கைது செய்ய 3 நாடுகளுக்கு இந்தியா வலியுறுத்தி கடிதம்

புதுடில்லி:
வங்கியில் மோசடியாக கடன் வாங்கி வெளிநாட்டுக்கு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியை கைது செய்ய 3 நாடுகளுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல கோடி அளவிற்கு, பண மோசடியில் செய்து விட்டு, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவிற்கு திரும்பக் கொண்டுவரும் நடவடிக்கையை துவக்க புலனாய்வுத்துறைக்கு மும்பை சிறப்பு கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து, ஐரோப்பிய நாடுகளில் பதுங்கி இருக்கும் நீரவ் மோடியை பிடிக்க உதவும்படி இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு இந்தியா கடிதம் எழுதி உள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இந்த நாடுகளுக்கும், அங்குள்ள இந்திய அமைப்புக்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த 3 நாடுகளுக்கு இந்தியா சார்பில் பலமுறை கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நீரவ் மோடியை இந்தியா கொண்டு வர அனுமதி அளிக்கும்படி அமலாக்கத்துறை சார்பில் கோர்ட்டில் கேட்கப்பட்டிருந்தது.

இந்த கோரிக்கையை ஏற்று, கோர்ட் அனுமதி கொடுத்துள்ளதால் முறைப்படி பிற நாடுகளிடம் உதவி கேட்கும் நடைமுறையை இந்தியா துவங்கி உள்ளது. நீரவ் மோடி லண்டன், ஹாங்காங், பாரீஸ் போன்ற நகரங்களுக்கு போலி பாஸ்போர்ட் மூலம் பயணம் செய்துள்ளதாக சிபிஐ ஏற்கனவே தெரிவித்துள்ளது.

இதனால் நீரவ் மோடிக்கு ரெட்கார்னர் நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!