நேபாளத்திற்கு பறந்தார் பிரதமர் மோடி

புதுடில்லி:
நேபாளத்திற்கு பறந்துள்ளார் பிரதமர் மோடி… அங்கு பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாள நாட்டின் காட்மாண்டுவில் இன்று மற்றும் நாளை (30,31) 4-வது பிம்ஸ்டெக் மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்த பிம்ஸ்டெக் தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும், வர்த்தக உறவுகளை அதிகரிக்க, வங்க கடலோர பகுதிகளில் அமைதியை மேம்படுத்தும் வகையில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளவும் உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!