நோட்டு ஒழிப்பு திட்டம் எதற்கு கொண்டு வரப்பட்டது… நிதி அமைச்சர் சொல்றார்

புதுடில்லி:
எதற்கு கொண்டு வரப்பட்டது நோட்டு ஒழிப்பு திட்டம் என்று விளக்கம் கொடுத்துள்ளார் மத்திய நிதி அமைச்சர்.

கருப்பு பணத்தை ஒழிக்கவும், பொருளாதாரத்தை சீரமைக்கவே நோட்டு ஒழிப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது என மத்திய நிதி அமைச்சர்  அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

நோட்டு ஒழிப்பு விவகாரம் தொடர்பாக காங். தலைவர் ராகுல் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இதற்கு பதிலடி அளிப்பது போல் தெரிவித்துள்ளதாவது:

99.3 சதவீதம் ரூ. 500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பியுள்ளது. நோட்டு ஒழிப்பு அறிவிப்பிற்கு பின்னரும் சட்டவிரோதமாக டிபாசிட் செய்து வரிஏய்ப்பு செய்தவர்கள் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. எனவே நோட்டு ஒழிப்பு திட்டம் நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்கவும் பொருளாதாரத்தை சீரமைக்கவும் உதவியாக இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!