நோயாளியை குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம்… அரசுக்கு நோட்டீஸ்

பாட்னா:
நோயாளியை குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவத்தில் பீஹார் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பீஹார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ஹஜிபூரில் அரசு மருத்துவமனைக்கு ஒரு நோயாளி சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு உரி்ய சிகிச்சை அளிக்காமல் மருத்துவமனை பணியாளர்கள் குண்டுகட்டாக தூக்கி குப்பை தொட்டியில் வீசி எறிந்தனர்.

இது தொடர்பாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதுகுறித்து மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கு பதிந்து பீஹார் தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி, நோயாளியை தூக்கி வீசியது ஏன்? தற்போது அவரது உடல் நிலை குறித்து 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!