பக்கத்து மாநில சட்டசபைகளிலும் விரைவில் போட்டி… மம்தா பானர்ஜி சொல்றார்

கோல்கட்டா:
எதிர்காலத்தில் பக்கத்து மாநில சட்டசபை தேர்தல்களிலும் போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளார் திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி.

பழங்குடியின மக்களின் மீதான தாக்குதலை தடுக்கும் விதமாக எதிர்காலத்தில் பக்கத்து மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக திரிணமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பக்கத்து மாநிலங்களுடன் நல்ல உறவுகளை நாங்கள் விரும்புகிறோம். வன்முறையை தூண்டி, தேசத்தை பிளவு படுத்தும் முயற்சியாக மக்கள் மீதான தாக்குதலில் தேசிய கட்சிகள் ஈடுபட்டால் அவர்களுக்காக நாங்கள் போராடுவோம்.

அசாம் மாநிலத்தில் இருந்து வங்காளிகள், பீகார் மாநிலத்தவர்கள் விரட்டப்பட்டு வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடி இன மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதனை தடுத்து நிறுத்தும் விதமாக எதிர்காலத்தில் ஜார்கண்ட், ஒடிசா, அசாம் போன்ற பக்கத்து மாநிலங்களில் நடைபெறும் சட்டபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!