பங்களா… மேற்கு வங்கத்தின் பெயர் இனி இதுதான்…!

கோல்கட்டா:
மாற்றம்… மாற்றம்… பெயர் மாற்றம் என்று தெரிய வந்துள்ளது. அட ஆமாங்க… மேற்குவங்கம் மாநிலத்தின் பெயரை தான் மாற்றுகிறாங்க.

மேற்கு வங்கம் என்ற மாநிலத்தின் பெயர் இனி பங்களா (வங்கம்) என அழைக்கப்படும். இது தொடர்பான மசோதா, மேற்கு வங்க சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும். பின்னர் இது அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும். ஆளும் கட்சியான திரிணாமுல் காங்., விரும்பியதால் இந்த பெயர் மாற்றப்படவுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!