பசுபாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை… மாநில அரசு முடிவு
டேராடூன்:
பசுபாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை வழங்கப் போறாங்களாம்… வழங்கப்போறாங்களாம்.
வட மாநிலங்களான உத்தரபிரதேசம், அரியானா, உத்ரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் கும்பலாக வந்து சிலர் தாக்குவது போன்ற வன்முறை சம்பவங்கள் வாடிக்கையாகி வருகிறது. இந்த, வன்முறைச் சம்பவங்களுக்கு சிலர் பலியாகியுள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்களை தடுக்க உத்தரகாண்டில் உண்மையான பசு பாது காவலர்களுக்கு அடையாள அட்டை வழங்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பசு சேவா கமிஷனின் தலைவர் என்.எஸ். ராவத் கூறியதாவது:
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து பசு பதுகாவலர்களையும் தனியாக அடையாளப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி பசு பாதுகாவலர்கள் அனைவருக்கும் விரைவில் அடையாள அட்டை வழங்கப்படும் என்றார்.
நன்றி- பத்மா மகன், திருச்சி