பசுமை தீர்ப்பாயம் போட்டது அபராதம்… ஆம் ஆத்மி அரசுக்கு
புதுடில்லி:
ஆம் ஆத்மி அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் ரூ. 50 கோடி அபராதம் விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டில்லியில் புதிய கட்டுமான திட்டப்படி, குடியிருப்பு பகுதியில், குறிப்பிட்ட தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி இயங்கி வந்த தொழிற்சாலையை அகற்ற நடவடிக்கை எடுக்காத, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம், 50 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இதனால் டில்லி அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S