படகு ஒன்று கவிழ்ந்ததில் 20 பேர் வரை காணாமல் போயுள்ளனர்

வட இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றில், படகு ஒன்று கவிழ்ந்ததில் 20 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.

அஸ்வக்ளந்தா எனப்படும் ஆலயம் அருகே உள்ள மலைப்பாங்கான பகுதியில், நேற்று (புதன்கிழமை) சுற்றுலாப் பயணிகளோடு சென்ற நாட்டுப்படகு, இயந்திர கோளாறு காரணமாக கவிழ்ந்துள்ளது.

இதனால் அதில் பயணித்த 33 பேரில் இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அங்கிட்டா பாரு மற்றும் கமல் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இதில் பயணித்த 33 பேரில் 19 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், ஏனையவர்களை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Sharing is caring!