பட்டமளிப்பு விழாவில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர்

மும்பை:
பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் அஹமது நகர் மாவட்டத்தில் உள்ள விவசாய பல்கலையில் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் கட்காரி, கவர்னர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழா துவங்கியதும், மேடையில் நின்று கொண்டிருந்த கட்காரி திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக, அருகில் நின்றிருந்த கவர்னர் அவரை தாங்கி பிடித்தார். தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!