பணம் பெற்று பிரான்ஸ் தீவில் குடியேறுவதாக தகவல்

இலங்கைக்குள் வசிக்கும்  சில குழுக்களினால், நபர்களிடம் பணம் பெற்று கொண்டு கடல் வழியில் பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான Réunion தீவில் குடியேற்றி வருவதாக தகவல் கிடைத்துள்ளதென வெளிவிவகார அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
ஆட்கடத்தல்காரர்களினால் வெளிநாட்டில் குடியேற எதிர்பார்த்திருக்கும் வடக்கு கிழக்கு இளைஞர் யுவதிகளை சிலாபம் மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களுக்கு அழைத்து வந்து தடுத்து வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருந்த அந்த நபர்களை அழைத்து சென்ற படகினை நடு கடலில் வைத்து கடற்படை அதிகாரிகள் கைது செய்தனர். கடந்த மாதம் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அவர்களிடம் விசாரணை கள் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நபர்களுக்குள் மட்டக்களப்பு, சிலாபம், மன்னார், திருகோணமலை உட்பட பல பிரதேசங்களை சேர்ந்த 21 சிங்களவர்களும் 67 தமிழர்களும் 2 முஸ்லிம்களும் தொடர்புப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், அந்த நபர்களுக்குள் பெண்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.
படகு மூலம் வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் நபர்கள் உரிய விலாசம் அற்ற நபர்களுக்கு பணம் வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கையை இலங்கையில் இருந்த சட்டவிரோதமாக நடுகடலில் மாயமாக Réunion தீவில் குடியேறிய நபர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sharing is caring!