பதவிக்காலத்தை குறைக்க முடியாது… அலேக் வர்மா தரப்பில் வாதம

புதுடில்லி:
பதவிக்காலத்தை குறைக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் அலேக் வர்மா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சிபிஐ இயக்குநரின் 2 ஆண்டு பதவிக்காலத்தை குறைக்க முடியாது என அலோக் வர்மா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கூறப்பட்டுள்ளது.
சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவை கட்டாய விடுப்பில் செல்லுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், எஸ்கே கவுல், கேஎம் ஜோசப் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
நேற்று அலோக் வர்மா தரப்பில் ஆஜரான வக்கீல் பாலி எஸ். நாரிமன் வாதாடுகையில், அலோக் வர்மா சிபிஐ இயக்குநராக 2017 பிப்., 1 அன்று நியமிக்கப்பட்டார்.

சிபிஐ இயக்குநராக நியமிக்கப்படும் ஒருவர், அந்த பதவியில் சட்டப்படி நிர்ணயம் செய்யப்பட்ட 2 ஆண்டு காலம் நீடிக்க வேண்டும். அதனை குறைக்க முடியாது. இடமாற்றம் செய்ய முடியாது. வர்மாவை கட்டாய விடுப்பில், செல்ல சிவிசி எந்த வித காரணமும் இல்லாமல் உத்தரவிட்டுள்ளது என வாதிட்டார்.

மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வாதாடுகையில், சிபிஐ இயக்குநரை விடுமுறையில் அனுப்புவதற்கு முன்னர் தேர்வு குழுவை கூட்ட வேண்டும் எனக்கூறுவதை ஏற்க முடியாது வர்மா, டில்லியில் அதே வீட்டில் தான் வசிக்கிறார். இதனால் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார் என்பதை ஏற்க முடியாது.

இயக்குநர் பதவியில் தான் தொடர்கிறார். அதற்கான பலன்களை அனுபவித்து வருகிறார் என வாதிட்டார்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறுகையில், இந்த வழக்கில், ஒருவர் கூறும் குற்றச் சாட்டுகள் அதன் மீதான பதில்கள் ஆகியவற்றுக்குள் செல்ல விரும்பவில்லை. சட்டத்தின்படி, இந்த விவகாரத்தை ஆய்வு செய்கிறோம் என்றார்.

தொடர்ந்து வழக்கு, டிச.,5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!