பதவியேற்ற நாளில் இருந்தே தனது பேச்சின் மூலமாகவும் நடத்தையின் மூலமாகவும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் ட்ரம்

பதவியேற்ற நாளில் இருந்தே தனது பேச்சின் மூலமாகவும் நடத்தையின் மூலமாகவும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வழக்கமாக உள்ளது. அந்த வகையில் தற்போது ட்ரம்ப்பின் இடது காலணியில் வெள்ளைக் காகிதம் சிக்கியது விவாதத்துக்கு உள்ளாகி வருகிறது.

இதுகுறித்து வெளியான வீடியோவில் ட்ரம்ப் காரில் இருந்து இறங்கி, விமானத்துக்குள் செல்ல படிகளில் ஏறுகிறார். அப்போது அவரின் காலணிகளில் ஒன்றில் வெள்ளைக் காகிதம் சிக்கி இருக்கிறது. அங்கு அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஏராளமானோர் சுற்றிலும் இருந்தும் அதைக் கவனிக்கவில்லை.

இது குறித்து விமர்சனம் செய்த நெட்டிசன் ஒருவர், ‘ட்ரம்ப், உங்களுக்கு நண்பர்கள் யாரும் இல்லையா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொருவர், ‘இது ட்ரம்ப்பின் தலைமைக்கான சரியான உருவகம்’ என்று தெரிவித்துள்ளார்.

இன்னொருவரோ ‘டாய்லெட் பேப்பர்’ உடன் ட்ரம்ப் நடப்பதற்கு பின்னணி இசை சேர்த்துப் பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு சிலர், ‘இதைக் கவனிக்காத அதிகாரிகள் மீது ட்ரம்ப் நடவடிக்கை எடுப்பார்’ என்று பதிவிட்டுள்ளனர்.

Sharing is caring!