பதவி உயர்வு பறிப்பு… நீதிபதி சுப்ரீம் கோர்ட்டில் மனு
புதுடில்லி:
பதவி உயர்வு பறிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதியே சுப்ரீம கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
உ.பி., மாநிலம், லக்னோவில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றுபவர் சுரேந்திர குமார் யாதவ். சுப்ரீம் கோர்ட் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல், 19ம் தேதி பிறப்பித்த உத்தரவுபடி, பாபர் மசூதி இடிப்பு வழக்கை, சி.பி.ஐ., கோர்ட்டில் விசாரித்து வருகிறது.
சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில், ரேபரேலியில் இருந்து இந்த வழக்கு விசாரணையை லக்னோவுக்கு மாற்ற வேண்டும்; நீதிபதி உள்பட யாரையும் மாற்றக் கூடாது. 2019ம் ஆண்டுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்.
அத்வானி, உமாபாரதி உட்பட எட்டு பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும் என கூறியது. அதன்படி சுரேந்திர குமார் யாதவ் நீதிபதியாக இருக்கும் சிபிஐ கோ்ட் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த ஜூன், 1ம் தேதி இவருக்கு மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு அளித்து, பணியிட மாற்றமும் செய்தது. அடுத்த சில மணி நேரங்களில், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மேற்கோள் காட்டி, பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டது.
பதவி உயர்வை ரத்து செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, நீதிபதி சுரேந்திர குமார் யாதவ், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவால், எனது பதவி உயர்வுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 28 ஆண்டுகளாக நீதித்துறையில் சிறப்பாக பணியாற்றிய எனக்கு இது மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது’ என, கூறியுள்ளார்.
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரிக்க தொடங்கி உள்ளது.
நன்றி– பத்மா மகன், திருச்சி