பதிலடியாக தனியார் நிறுவனங்களுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஈரான் முடிவு

அமெரிக்கா விதித்த பொருளாதார தடைக்கு பதிலடியாக தனியார் நிறுவனங்களுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஈரான் முடிவெடுத்துள்ளது.ஈரான் மற்றும் அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து இரு நாடுகளும் விலகின. அதிலிருந்து அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் வர்த்தகப் போர் தொடங்கி உள்ளது. ஈரானின் முக்கிய வர்த்தகமான கச்சா எண்ணெய் ஏற்றுமதியைக் குலைக்க அமெரிக்கா நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. முதல் கட்டமாக ஈரானுக்கு பொருளாதார தடை விதித்தது.

அத்துடன் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளையும் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு நிறுத்தாவிட்டால் இந்த நாடுகளுக்கும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஈரான் பயப்படாமல் உள்ளது. கச்சா எண்ணெய் சந்தையில் இருந்து எங்களை வெளியேற்ற முடியாது என பகிரங்க சவால் விடுத்துள்ளது. அதை ஒட்டி தனியார் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்ய ஈரான் அரசு உத்தேசித்துள்ளது. அத்துடன் தங்களிடம் கச்சா எண்ணெய் வாங்கும் தனியார் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை ஈரான் அறிவித்துள்ளது.

Sharing is caring!