பதில் அளியுங்கள்… மத்திய அரசுக்கு கோர்ட் உத்தரவு

புதுடில்லி:
பதில் அளியுங்கள்… பதில் அளியுங்கள் என்று மத்திய அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எதற்காக தெரியுங்களா?

சி.பி.ஐ., மற்றும் சி.ஐ.சி., எனப்படும் மத்திய தகவல் கமிஷன், லோக்பால் போன்ற தன்னிச்சை அதிகாரம் பெற்ற அமைப்புகளுக்கான தலைவர்களை தேர்தெடுக்கும் பணியை, பிரதமர் தலைமையிலான குழு செய்து வருகிறது.

இந்த குழுவில், லோக்சபா எதிர்கட்சி தலைவரும் இடம்பெறுவார். ஆனால், தற்போது லோக்சபாவில் காங்கிரசுக்கு போதிய உறுப்பினர்கள் இல்லை. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்து, அந்த கட்சிக்கு கிடைக்கவில்லை.

இந்நிலையில், ‘லோக்சபாவில், பிரதான எதிர்கட்சியின் தலைவரை, சபையின் எதிர்கட்சி தலைவராக ஏற்று, தேர்வுக் குழுவில் அதற்குரிய அதிகாரம் வழங்கப்பட வேண்டும்’ என, தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இந்த வழக்கு தொடர்பாக, மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்’ என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!