பத்திரிகையாளர் ஷுஜாத் புகாரியைக் கொன்ற பயங்கரவாதிகள் மூவரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

பத்திரிகையாளர் ஷுஜாத் புகாரியைக் கொன்ற பயங்கரவாதிகள் மூவரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த மாதம் 14ஆம் தேதி காஷ்மீர் மாநில தலைகர் ஸ்ரீநகரில் பிரபல பத்திரிகையாளர் ஷுஜாத் புகாரியும் அவர் பாதுகாவலர்களும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ரைசிங் காஷ்மீர் பத்திரிகை ஆசிரியராக பணி புரியும் புகாரி அவர் அலுவலக வாசலில் சுடப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்து அவர்களை சுட்டுக் கொன்ற மூவரும் தப்பி விட்டனர். இந்த கொலை குறித்து நாட்டில் பல சர்ச்சைகள் எழுந்தன. இந்நிகழ்வால் காஷ்மீர் அரசுக்கு அளித்த ஆதரவை பாஜக விலக்கிக் கொண்டதால் அரசு கவிழ்ந்தது. இந்த கொலைக்கு எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவிலை. அவருடைய பாதுகாப்புப் படையினர் சதி செய்து அவரைக் கொன்றதாக சில அமைப்புகள் கூறி வருகின்றன.

ஸ்ரீநகர் காவல் துறையினர் சிறப்புப் படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைச் சம்பவம் நடந்த இடத்திலும் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகள் ஆராயபட்டன. அந்த பதிவுகளில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவரின் உருவங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அந்த நபர்கள் யார் என காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

அந்த ஆய்வில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பயங்கரவாதியான நவீத் ஜூட் மற்றும் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த இருவர் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பயங்கரவாதி நவீத் ஜூட் காஷ்மீர் காவல்துறையினரிடம் இருந்து தப்பி ஓடியவர் ஆவார். அவருடைய புகைப்படங்கள் மற்றும் அனைத்து விவரங்களும் காவல்துறையிடம் உள்ளது.

காவல் துறையினர் அது நவித் ஜூட் என்பதை உறுதி செய்துள்ளனர். மற்ற இருவரும் காஷ்மீர் மாநிலத்தவர் என அறிவித்துள்ள காவல்துறையினர் அவர்களைக் குறித்த விவரங்களை வெளியிடவில்லை. மூவரையும் தீவிரமாக தேடி வரும் காவல்துறையினர் கைதுக்குப் பிறகு முழு விவரங்களையும் வெளியிடுவார்கள் என கூறப்ப்டுகிறது.

Sharing is caring!