பத்ரிநாத் யாத்திரை… பக்தர்கள் எண்ணிக்கை 17 லட்சமாக உயர்வு

கோபேஸ்வர்:
17 லட்சமாக உயர்ந்துள்ளது… பக்தர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இமயமலை பகுதியில் உள்ள புனிததலமான பத்ரிநாத், கேதர்நாத் யாத்திரை சென்ற பக்தர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 17,19,678 என உயர்ந்துள்ளது.

பத்ரிநாத் கோயில் ஏப்ரல் 30ல் திறக்கப்பட்டு, பல சிரமங்களை கடந்து பக்தர்கள் சென்று வந்தனர். அக்டோபர் 26 வரை 10 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். கேதர்நாத் கோயில் ஏப்ரல் 29ல் திறக்கப்பட்டு அக்டோபர் 26 வரை ஏழு லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பத்ரிநாத் கோயில் சமிதி அதிகாரி ஹரீஷ் காட் கூறியிருப்பதாவது: இரு கோயில்களிலும் இதுவரை 17,19,678 பேர் தரிசனம் செய்தனர். கடந்த ஆண்டு இதே புனிதயாத்திரையில் எட்டு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நம்பிக்கை மற்றும் பக்தி அதிகரித்து வருவதால் இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!