பனிப்பொழிவில் சிக்கிய சுற்றுலாப்பயணிகள்… ராணுவம் மீட்டது
காங்டோக்:
பனிப்பொழிவில் சிக்கி தவித்த 1500 சுற்றுலாப் பயணிகளை ராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
சிக்கிமில் இந்திய சீனா எல்லையில், பனிப்பொழிவில் சிக்கி தவித்த 1,500 சுற்றுலா பயணிகளை ராணுவத்தினர் மீட்டனர்.
இந்தியா சீனா எல்லையில் உள்ள நாதுலா மற்றும் சோம்கோ பகுதியில், கடும் பனிப்பொழிவு காரணமாக சாலைகள் முடங்கின. இதனால், கிழக்கு சிக்கிமை இணைக்கும் சாலையில் வாகனங்கள் முடங்கின. இது குறித்து தகவல் ராணுவத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு விரைந்த ராணுவ வீரர்கள், 1,500 சுற்றுலா பயணிகளை மீட்டு, முகாமிற்கு அழைத்து வந்து உணவு மற்றும் மருத்துவ வசதி அளித்தனர். தொடர்ந்து, அவர்களை தலைநகருக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S