பயங்கரவாதிகள் தாக்குதல் 3 போலீசார் பலியானதால் அதிர்ச்சி

ஸ்ரீநகர்:
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 போலீசார் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில், ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், மூன்று போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில், கவர்னர் ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின், சோபியான் மாவட்டத்தில் உள்ள, சைனபோரா பகுதியில், போலீசார் நேற்று, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதிகள் மறைந்திருந்து நடத்திய தாக்குதலில், மூன்று போலீசார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், ஒரு போலீஸ்காரர் காயம் அடைந்தார். இவர், மருத்துவமனையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.உயிரிழந்த போலீசாரிடம் இருந்து, ஆயுதங்களை, பயங்கரவாதிகள் பறித்துச் சென்றனர். தாக்குதலுக்கு, ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!