பயங்கரவாதிக்கு இரங்கல் கூட்டம்… 2 மாணவர்கள் மீது தேச துரோக வழக்கு

அலிகார்:
பயங்கரவாதிக்கு இரங்கள் கூட்டம் நடத்திய 2 மாணவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உ.பி. பல்கலை.யில் பயங்கரவாதிக்கு இரங்கல் கூட்டம் நடத்திய 2 காஷ்மீர் மாணவர்கள் மீது போலீசார் தேச துரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உபி. மாநிலத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலை. உள்ளது. இங்கு நேற்று மாணவர்கள் சார்பில் இரங்கல் கூட்டம் நடந்துள்ளது. அப்போது கடந்த சில நாட்களுக்கு முன் காஷமீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி மனான் பஷீர் வானி என்பவன் பாதுகாப்புபடையினர் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.

அந்த பயங்கரவாதியை காஷ்மீர் விடுதலைக்காக போராடிய தியாகி என கூறி இரங்கல் கூட்டம் நடத்தியதாகவும், கூட்டத்தின் போது இந்தியாவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து அலிகர் மாவட்ட எஸ்.பி. தலைமையிலான போலீசார் அலிகார் பல்கலை.யில் விசாரணை நடத்தி இரங்கல் கூட்டம் நடத்திய காஷ்மீரைச் சேர்ந்த வாஷிம் அயூப் மாலிக், அப்துல் மிர் என்ற இரு மாணவர்கள் மீது தேச துரோக ( IPC 124/A) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!