பயங்கரவாத அமைப்பில் சேர பேஸ்புக்கில் மூளைச்சலவை… பெண் கைது

ஜம்மு:
பயங்கரவாத அமைப்பில் சேர பேஸ்புக்கில் மூளைச்சலவை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு காஷ்மீரின் பாண்டிபூர் பகுதியில் வசிக்கும் பெண் ஷாஜியா. இவரது நடவடிக்கையில் சந்தேகமுற்ற போலீசார் அவரை தீவிரமாக கண்காணித்தனர். இதில் அவர் பேஸ்புக் மூலம் பல இளைஞர்களுடன் நட்பு பாராட்டி வந்துள்ளார்.

நெருங்கி பேசும் நண்பர்களுடன் ஜிகாத் பிரசாரம் செய்துள்ளார். குறிப்பாக ஜெய் சி இ முகம்மது பயங்கரவாத அமைப்பில் சேருமாறு கேட்டுள்ளார். மேலும் இந்த பெண் சில ரக ஆயுதங்களையும், பயங்கரவாதம் தொடர்பான சில புத்தகங்களையும் இளைஞர்களுக்கு வழங்கியுள்ளார்.

காஷ்மீரில் சமூக வலை தளம் மூலம் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பாக இந்த பெண் முதன் முதலாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!