பயங்கரவாத தாக்குதலா?…..இங்கிலாந்து பாராளுமன்றம் மீது தாக்குதல்

இங்கிலாந்து நாடாளுமன்றத்தை சுற்றிய தடுப்புகளை வேகமாக பாய்ந்து கார் ஒன்று மோதியா பரபரப்பு சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற வகையில் விசாரிக்கப்படுகிறது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் என்ற மிகுந்த பாதுகாப்பு நிறைந்த பகுதியில் இங்கிலாந்தின் நாடாளுமன்றம் உள்ளது.  இங்கு அந்நாட்டு நேரப்படி காலை 7.30 மணி அளவில் நாடாளுமன்றத்தின் வெளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மீது ஒரு மர்ம கார் பயங்கர வேகத்தில் வந்த ஒரு கார் சீறிப் பாய்ந்தது.  இதனால் அந்த இடமே பரபரப்பானது.  கண் இமைக்கும் நொடியில் அங்கிருந்த பொதுமக்கள் மீதும் அந்தக் கார் மோதி தூக்கி வீசியது. சம்பவம் குறித்து தெரிந்ததும் அங்கு பாதுகாப்புப் படையினர் விரைந்தனர். படுகாயமடைந்த இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு சிறிய அளவில் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் காரை தாறுமாறாக ஓட்டி வந்த மர்ம நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது சாலை விதிமீறலில் ஈடுப்பட்டதாக வசக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் பின் எந்த விவரங்களும் அறிவிக்கப்படாமல் இந்த விவகாரம் தீவிரவாத ஒழிப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த இந்தச் சம்பவம் தீவிரவாத செயலாக இருக்கலாம் என்ற வகையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பேசியுள்ள இங்கிலாந்து பிரதமர் தெரசா மெ, இதனால் பாதிக்கப்பட்டவர்களை நினைத்து துயரப்படுகிறேன். அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். மோசமான நிகழ்வின் பொது அங்கு இருங்கு விரைவாகவும் துணிச்சலுடனும் செயல்பட்டவர்களுக்கு எனது நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.

Sharing is caring!