பயங்கரவாத தாக்குதலை முறியடித்த பெண் அதிகாரிக்கு பாராட்டு

கராச்சி:
பயங்கரவாத தாக்குதலை முறியடித்த பெண் போலீஸ் அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கராச்சியில், சீன தூதரகத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதலை முறியடித்த போலீஸ் படைக்கு தலைமையேற்ற பெண் அதிகாரிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

சீனத் தூதரகத்தை கைப்பற்றி ஊழியர்களை பிணைக் கைதிகளாகப் பிடிக்கும் நோக்குடன் உணவு, மருத்துகள் உள்ளிட்ட பொருட்களுடன் பயங்கரவாதிகள் துாதரகத்தை வளைத்தனர்.

ஆனால் சுஹாய் அசீஸ் தல்பூர் பெண் எஸ்.பி., வகுத்த வியூகத்தின்படி, அவர் தலைமையிலான போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!