“பயணிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்”

ஐதராபாத்:
பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று ரயில்வே வாரிய புதிய தலைவர் தெரிவித்துள்ளார்.

ரயில்வே வாரிய தலைவராக இருந்த அஸ்வினி லோகான் ஒய்வு பெற்றதையடுத்து புதிய தலைவராக வி.கே.யாதவ், நியமிக்கப்பட்டார்.

மத்திய அமைச்சரவையில் நியமன கமிட்டி யாதவை நியமித்தது.
இதையடுத்த யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:

”ரயில் பயணிகளின் பாதுகாப்பிற்கே ரயில்வே வாரியம் முன்னுரிமை அளிக்கும். மேலும், பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!