பயன்பாடு இல்லாம பூட்டி வைச்சா எப்படிங்க?

பழனி:
பயன்பாடு இல்லாமல் ஏங்க பூட்டியே வைத்து இருக்கிறீர்கள். திறந்து விடுங்க என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆன்மிக சுற்றுலா தலமான பழநி பஸ் ஸ்டாண்டில் அடிப்படைவசதிகள் பெயரளவிலேயே உள்ளது. இலவச கழிப்பறைகள் சுத்தமின்மை காரணமாக பயணிகள், பஸ் நிறுத்தங்கள், குளத்துரோடு பகுதிகளை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.

மேலும் பஸ் ஸ்டாண்டில் அம்மா உணவகம் அருகே மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக கட்டிய கழிப்பறைகள் பயன்பாடு இல்லாமல் பூட்டிக்கிடக்கிறது.

இதனால் வெளியூர்களில் இருந்து வரும் மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மாற்றுத்திறனாளிகள் கழிப்பறையை உடனே பயன்பாட்டுக்கு கொண்டுவர நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!