பரங்கிமலை ரயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.8 லட்சம் வழங்க உத்தரவு

சென்னை:
இழப்பீடு ரூ.8 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?

பரங்கிமலை ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு தலா ரூ.8 லட்சம் வழங்க வேண்டும் என ரயில் இழப்பீட்டு தீர்ப்பாயம் ரயில்வே துறைக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்சார ரயிலில் பயணம் செய்தவர்களில் 5 பேர் பரங்கிமலையில் பக்கவாட்டு சுவர் மீது மோதியதில் பலியாயினர்.

இது குறித்து தானாக முன்வந்து விசாரித்த ரயில்வே இழப்பீட்டு தீர்ப்பாயம் ரயில்வே துறைக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:

பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். விபத்து குறித்து சேத்துப்பட்டில் உள்ள தீர்ப்பாய அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு கூடுதல் பதிவாளர் அருந்ததி தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!