பராமரிப்பு பணி… ரயில்கள் ரத்து… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

சென்னை:
பராமரிப்பு நடக்குது… அதனால் ரயில்கள் ரத்து… ரத்து என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பராமரிப்புப் பணிகள் நடைபெறும் காரணத்தால் இன்றும் நாளையும் தாம்பரம் –சென்னைக் கடற்கரை செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

எழும்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடை 10 மற்றும்  11-ல் உள்ள நடை மேம்பாலம் விரிவாக்க பணிகள் நேற்றும், இன்றும் 16ம் தேதிகளில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து தென்னக ரயில்வே சார்பில் தெரிவித்துள்ளதாவது: 15-ம் தேதி தாம்பரம் – கடற்கரைக்கு இரவு 11.30 மணி மற்றும் கடற்கரை – தாம்பரத்துக்கு இரவு 11.05, 11.30, 11,59 ஆகிய நேரங்களில் செல்லும் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.

செங்கல்பட்டு – கடற்கரைக்கு இரவு 10.15, 11.10 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில் தாம்பரம் வரை இயக்கப்பட்டது. இன்று ‘16-ம் தேதி கடற்கரை – தாம்பரத்துக்கு அதிகாலை 4.15 மற்றும் தாம்பரம் – கடற்கரைக்கு அதிகாலை 4.00, 4.20, 4.40, 5.15 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படும்.

கடற்கரை – செங்கல்பட்டுக்கு அதிகாலை 3.55, 4.40, 5.00 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!