பரிசில் குப்பை அகற்றும் வாகனத்துக்குள் சிக்குண்டு முதியவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்

பரிசில் குப்பை அகற்றும் வாகனத்துக்குள் சிக்குண்டு முதியவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பரிஸ் 13 ஆம் வட்டாரத்தின் Arthur Rimbaud alley இல் இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு சற்று பின்னதாக இடம்பெற்றுள்ளது. குப்பை அகற்றும் வாகனத்தை பின்னால் எடுக்கும்போது, அலறம் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிச்சியடைந்த தொழிலாளி வாகனத்தை நிறுத்தி, இறங்கிச் சென்றுள்ளார். வாகனத்துக்குள் 72 வயதுடைய முதியவர் ஒருவர் சிக்குண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை பார்த்து அதிச்சியடைந்துள்ளார். உடனடியாக தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். ஆனால் அவர் சில நிமிடங்களுக்குள்ளேயே உயிரிழந்துள்ளார்.

விசாரணைகளை ஆரம்பித்துள்ள காவல்துறையினர், முதல்கட்டமாக சாரதியை Pitié Salpêtrière மருத்துவமனைக்கு மதுபோதை சோதிப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

Sharing is caring!