பரிந்துரை… மத்திய அரசுக்கு பரிந்துரை… ஒரே நாடு… ஒரே தேர்தல்

புதுடில்லி:
பரிந்துரை… பரிந்துரை… மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு மத்திய சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இது குறித்து கூறி இருப்பதாவது:

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்த சட்ட பிரிவில் 172-ல் திருத்தம் செய்ய வேண்டும். ஜம்முகாஷ்மீர் மாநிலத்தை தவிர மற்ற மாநில சட்டசபைகளுக்கும் மக்களவைக்கும் ஒரே தேர்தல் நடத்தலாம்.

தேர்தலை நடத்துவதற்கு முன் மாநிலங்களின் கருத்துகளை கேட்டறிய வேண்டும். ஒரே தேர்தல் நடத்துவதன் மூலம் மக்களின் வரிப்பணம் வீணாகாமல் சேமிக்கப்படும். மேலும் இதனால் ஒரே மாதிரியான அரசியலமைப்பு சட்டம் நடைமுறைபடுத்த வசதியாக இருக்கும். இவ்வாறு பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!